ஆட்டுக்கொத்துக் கறி செய்வது எப்படி! - www.pathivu24.com

பிந்திய பதிவேற்றம்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 7, 2018

ஆட்டுக்கொத்துக் கறி செய்வது எப்படி!

தோசை, பூரி, தோசை, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஆட்டுக்கொத்துக் கறி . இன்று இந்த கொத்துக்கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கொத்துக் கறி  - 200 கிராம்,
எண்ணெய் தேவைக்கு.

தாளிக்க...

இடிச்ச பூண்டு - 3,
இடிச்ச சின்ன வெங்காயம் - 5,
காய்ந்த மிளகாய் - 5,
கறிவேப்பிலை - சிறிது,
மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ தேக்கரண்டி.


செய்முறை :


ஆட்டுக்கொத்துக் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் ஆட்டுக்கொத்துக் கறி , உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும்.

இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான ஆட்டுக்கொத்துக் கறி  ரெடி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages